உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் அனைத்து தொலைபேசி அழைப்புக் கட்டணங்களும் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – இன்று (03) நள்ளிரவு முதல் தொலைபேசி அழைப்புக் கட்டணம் அதிகரிக்கப்படும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRC) தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் தொலைத்தொடர்பு வரி அதிகரிக்கப்பட்டுள்ளமையே இதற்கான காரணம் என அதன் பிரதிப் பணிப்பாளர் இந்திரஜித் ஹந்தபாங்கொட தெரிவித்துள்ளார்.

அதன்படி தொலைத்தொடர்பு வரி 11.25% இல் இருந்து 15% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், மதிப்பு கூட்டு வரி (VAT) 8 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால், தொலைபேசி கட்டணமும் உயரும் எனத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, மொத்த வரி விகிதத்தில் 22.6% ஆக இருந்த வரி விகிதம் 31.43% ஆக உயரும் என்றார்.

இணைய சேவைக் கட்டணங்கள் மீதான பெறுமதி சேர் வரி அதிகரிப்பும் திருத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, 10.2% முதல் 14.29% வரை வரி உயரும் என்றார்.

நாட்டிலுள்ள முன்னணி தொலைபேசி சேவை வழங்குனர்கள் உரிய வரித் திருத்தங்களுக்கு அமைவாக தமது அழைப்புக் கட்டணங்களையும் இணைய சேவைக் கட்டணங்களையும் அதிகரிப்பதுடன், இது தொடர்பில் நுகர்வோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

அரிசி இறக்குமதியை தடை செய்ய தீர்மானம்

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான சமிந்தவின் இறுதிக் கிரியைகள் இன்று

அரசியலமைப்புச் சபை நாளை கூடுகிறது