உள்நாடு

இன்று நள்ளிரவுடன் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்படுவதாக அறிவிப்பு

நாடளாவிய ரீதியாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று (30) நள்ளிரவுடன் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்களின் போக்குவரத்த நடவடிக்கைகளை கருத்திற் கொண்டு குறித்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக குறித்த சங்கத்தின் செயலாளர் சஞ்சய ஜயசுந்தர தெரிவித்தார்.

இன்று (30) மாலை 4.30 மணிமுதல் பயணச்சீட்டு விநியோக நடவடிக்கைகளில் இருந்து விலகவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் முன்னதாக அறிவித்திருந்தது.

பல கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்து அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் மற்றும் புகையிரத திணைக்களத்தின் நிறைவேற்று அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடல் தோல்வியடைந்ததன் காரணமாகவே நிலைய அதிபர்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருந்தனர்.

Related posts

இந்தியாவின் கொவிஷீல்ட் தடுப்பூசிகள் நாட்டுக்கு வருவதில் தாமதம்

கொழும்பு துறைமுக நகரில் இலங்கையர்களுக்கும் வேலைவாய்ப்பு 

கெரவலபிட்டியவில் முதலாவது கழிவிலிருந்து மின்பிறப்பாக்கல் ஆலை [VIDEO]