உள்நாடு

இன்று நள்ளிரவுக்குப் பிறகு எரிபொருள் இல்லை

(UTV | கொழும்பு) – இன்று (27) நள்ளிரவு முதல் அடுத்த மாதம் (10) வரை அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தனியார் துறை வாகனங்களுக்கு டீசல் மற்றும் பெட்ரோல் வழங்கப்படுவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில், இந்த காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதற்காக மட்டுமே எரிபொருள் விநியோகிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இதன்படி, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், துறைமுகம், சுகாதாரத் துறை, அத்தியாவசிய உணவு மற்றும் பானங்கள் விநியோகம், விவசாயப் பொருட்களின் போக்குவரத்து போன்றவற்றுக்கு மாத்திரமே எரிபொருளை வழங்கப்படும்.

Related posts

நேற்று பதிவான கொரோனா தொற்றாளர்களில் 12 பேர் கடற்படையினர்

எக்ஸ்பிரஸ் பேர்ல் பற்றிய விசாரணைகள் இறுதிக்கட்டத்தில்

தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த ஐனாதிபதி பணிப்பு