உள்நாடு

பிரதான பணவீக்கம் மற்றும் தங்கத்தின் பெறுமதி மாற்றம்!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் வருடாந்த புள்ளி மாற்றத்தால் அளவிடப்படும் பிரதான பணவீக்கம், 2024 மார்ச் மாதத்தில் 0.9%ஆக இருந்து 2024 ஏப்ரலில் 1.5% ஆக உயயர்ந்துள்ளது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், உணவுப் பணவீக்கம் 2024 மார்ச் மாதத்தில் 3.8%ஆக இருந்து ஏப்ரல் மாதத்தில் 2.9% ஆகக் குறைந்துள்ளது. அதேபோல், உணவு அல்லாத பணவீக்கம் 2024 ஏப்ரலில் 0.9% ஆக அதிகரித்துள்ள நிலையில், இது 2024 மார்ச் மாதத்தில் -0.5% ஆக பதிவாகியிருந்தது.

22 கரட் தங்கப் பவுணொன்றின் (Gold pawn) விலை இன்றையதினம் (29.04.2024) 179,400 ரூபாவாக பதிவாகியுள்ளது. நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில், இன்று தங்கத்தின் பெறுமதி அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இன்றைய தினம் 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 24,460 ரூபாவாகவும், 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 195,650 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அதேவேளை, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22,430 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 179,400 ரூபாவாகவும் காணப்படுகிறது.

மேலும், 21 கரட் 1 கிராம் தங்கம் 21,410 ரூபாவாகவும் 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 171,250 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

 

Related posts

உயிரிழந்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி

வடக்கு ஆளுநருக்கும் இந்திய துணைத் தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

editor

மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்