உள்நாடு

இன்று ஜனாதிபதி தலைமையில் சர்வ கட்சி கூடுகிறது!!

(UTV | கொழும்பு) –

சர்வகட்சி மாநாடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களை தெளிவூட்டும் நோக்கில் இந்த சர்வகட்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இக்கூட்டத்தில் கலந்துகொள்வதாக அறிவித்துள்ளதுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பும் கலந்துகொள்ளவுள்ளது.

அனுர குமார திஸ்ஸநாயக்க தலைமையிலான ஜே.வி.பி கலந்துகொள்வதில்லை என அறிவித்துள்ளதுடன்,  அகில இலங்கை தமிழ் காங்கிரஸும் கலந்துகொள்வதில்லை என அறிவித்துள்ளது.

முஸ்லிம் கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை அறிவிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மியன்மாரிலிருந்து நாடு திரும்பிய 74 இலங்கையர்கள்

எரிபொருள் விலை அதிகரிப்பு – கம்மன்பில பதவி விலக வேண்டும் : விசேட ஊடக சந்திப்பு

அரசியலமைப்பு மறுசீரமைப்பு : ஜனாதிபதி செயலகத்தின் அறிவிப்பு