சூடான செய்திகள் 1

இன்று ஜனாதிபதியின் சிம்மாசன உரை மீதான விவாதம்

(UTV~COLOMBO)-எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடரை நேற்று முன்தினம் ஆம்பித்து வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய சிம்மாசன உரை தொடர்பில் இன்று விவாதிக்கப்படவுள்ளது.

இதேவேளை, பாராளுமன்றத்தின் கூட்டத் தொடர் நிறைவு பெற்றத்தை அடுத்து இரத்து செய்யப்பட்ட தெரிவுக் குழுவிற்கான புதிய உறுப்பினர்கள் எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் நியமிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல குறிப்பிட்டார்.

அனைத்து கட்சிகளின் தலைவர்களுடைய ஏகமனதான இணக்கப்பாட்டுடன் சபாநாயகரால் தெரிவுக் குழுவிற்கான உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என அவர் கூறியுள்ளார்.

அதற்கமைய, கோப் எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான தெரிவுக் குழு, அரச நிதிச் சபை ஆகியவற்றிற்கும் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

இதனை தவிர பாராளுமன்ற குழுவிற்கான புதிய உறுப்பினர்கள் இன்று நியமிக்கப்படவுள்ளதாக பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

முஸ்லிம்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு 53 நாடுகள் அடங்கிய OIC வலியுறுத்தல்

பரீட்சையினை இரத்து செய்ய அரசு தீர்மானம்

ஆபாசக்காட்சிகளை பார்வையிட்டமை குறித்து விசாரணை