வகைப்படுத்தப்படாத

இன்று சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடும் ஜனாதிபதி

(UTV|COLOMBO)-பிணை முறி அறிக்கை மற்றும் அதன் பரிந்துரைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.

டுவிட்டர் பதிவு மூலம் ஜனாதிபதி அண்மையில் இந்த விடயத்தை அறிவித்திருந்தார்.

சர்சைக்குரிய பிணை முறி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த 30 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

1400 பக்கங்களை கொண்ட குறித்த அறிக்கையில் 70 பேரின் சாட்சியங்களும், சர்சைக்குரிய பிணை முறி தொடர்பில் எடுக்க வேண்டிய பரிந்துரைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கடந்த ஆட்சியின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று கையளிக்கப்பட்டது.

ஆணைக்குழுவின் தலைவரான மேல்நீதிமன்ற நீதியரசர் பத்மன் சூரசேன உள்ளிட்ட அங்கத்தர்களால் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை ஆயிரத்து 135 பக்கங்களைக் கொண்டதாகும்.

கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி ஜனாதிபதியினால் இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டது.

2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிவரை இடம்பெற்ற பாரிய மோசடிகள், ஊழல்கள், அரச வளங்கள், அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் என்பனவற்றை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை என்பன தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

Related posts

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

Two Chinese arrested for credit card forgery

நாகை கடற்தொழிலாளர்கள் இன்று உணவு தவிர்ப்பு போராட்டத்தில்