உள்நாடு

இன்று கொழும்பில் பிம்ஸ்டெக் மாநாடு

(UTV | கொழும்பு) – பலதுறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சியான பிம்ஸ்டெக் மாநாடு இன்று கொழும்பில், ஆரம்பமாகின்றது.

பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்துள்ளனர்.

இதன்போது, மியான்மாரின் வெளிவிவகார அமைச்சர் இந்த மாநாட்டில் இணைய வழியாகப் பங்கேற்கவுள்ளார்.

உச்சிமாநாடு மற்றும் தொடர்ச்சியான கூட்டங்களின் போது, பிராந்தியக் குழுவாக பிம்ஸ்டெக் அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து பிரதிநிதிகள் இதன்போது கலந்துரையாடுவர்.

இந்த உச்சிமாநாட்டின் போது, பிம்ஸ்டெக் சாசனம் ஏற்கப்பட்டு, பல சட்ட ஒப்பந்தங்களில் கைச்சாத்திடப்படும் என வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாசகார செயற்பாடுகள் மூலம் அரசியல் அதிகாரத்தைப் பெறும் வேலைத்திட்டங்கள் எம்மிடம் இல்லை – சஜித்

editor

அதிகாரிகளின் அசமந்த போக்கு – ஹிங்குராங்கொடை பிரதேச கிராமங்களின் அவல நிலை

சிவனொளி பாத மலை வனப் பகுதியில் தீப்பரவல்