வகைப்படுத்தப்படாத

இன்று கிராம நிருவாக அதிகாரத்திற்கான வாக்களிப்பு

(UTV|COLOMBO)-கிராம நிருவாக அதிகாரத்திற்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு  இன்று காலை 7 மணிக்கு  ஆரம்பமாகுநின்றது . மாலை 4 மணி வரை வாக்காளர்கள் வாக்களிக்க முடியும்.

இம்முறை வட்டார மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவ முறைகள் அடங்கிய கலப்பு முறையின் கீழ் தேர்தல் நடைபெறுகின்றது. இதன் கீழ் வட்டார அடிப்படையில் 60 சதவீதமான வாக்காளர்களும் விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் 40 சதவீதமான பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்படுவார்கள்.
மொத்தமாக 43 அரசியல் கட்சிகளையும், 222 சுயேச்சைக் குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி 57 ஆயிரத்து 252 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
இவர்கள் மத்தியிலிருந்து 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள், 276 பிரதேச சபைகளுக்காக எண்ணாயிரத்து 356 வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
இந்தத் தேர்தலில் ஒரு கோடி 57 லட்சத்து 60 ஆயிரத்து 867 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளார்கள். நாடெங்கிலும் 14 ஆயிரத்து 374 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு  நடைபெறுகின்றது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரச காணிகள் – ஜனாதிபதி ஆலோசனை

அனர்த்தத்தினால் மின் விநியோக கட்டமைப்பு பாதிப்பு

முஸ்லிம் நபருக்குச் சொந்தமான உணவகத்தில் தீ