உள்நாடு

இன்று காலை முதல் புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்

(UTV | கொழும்பு) –  இன்று(07) காலை 05.00 மணி முதல் கொழும்பு மாவட்டத்தின் புளுமென்டல் பொலிஸ் பிரிவு மற்றும் வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவின் விஜயபுர கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன

மேலும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள களனி பொலிஸ் பிரிவு இன்று(07) காலை 05.00 மணி முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன

இதேவேளை, இன்று(07) காலை 05 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் கொழும்பு மாவட்டத்தின் கொம்பனிதெரு பொலிஸ் பிரிவின் ஹுனுபிடிய கிராம உத்தியோகத்தர் பிரிவு, கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவின் 60 தோட்டம், வெல்லவத்தை பொலிஸ் பிரிவின் கோகிலா வீதி ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதேபோல், கம்பஹா மாவட்டம், வத்தளை பொலிஸ் பிரிவின் கெரவலபிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவு, ஹேகித்த கிராம உத்தியோகத்தர் பிரிவு, குருந்துஹேன கிராம உத்தியோகத்தர் பிரிவு, எவரிவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு, வெலிகடமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகியன இன்று(07)  காலை 05 மணி முதல தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பேலியகொட பொலிஸ் பிரிவின் பேலியகொடவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு, பேலியகொடை கங்கபட கிராம உத்தியோகத்தர் பிரிவு, மீகஹவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு, பட்டிய – வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் மற்றும் கிரிபத்கொடை பொலிஸ் பிரிவின் வெலேகொட வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவும் இன்று(07) காலை 05.00 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேலியகொடை பொலிஸ் பிரிவின் மற்றும் வத்தளை பொலிஸ் பிரிவின் மேல்குறிப்பிட்டுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை தவிர்ந்த ஏனைய தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் இன்று(07) காலை 05.00 மணிமுதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதேநேரம், முகத்துவாரம், கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், ஆட்டுப்பட்டித்தெரு, டேம் வீதி, வாழைத்தோட்டம், மாளிகாவத்தை, தெமட்டகொடை, மருதானை, ஆகிய காவற்துறை அதிகார பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் கொம்பனித்தெரு காவற்துறை அதிகார பிரதேசத்தில் வேகந்த கிராம சேவகர் பிரிவும், பொரளை காவற்துறை அதிகார பிரதேசத்தில் வனாத்தமுல்ல கிராம சேவகர் பிரிவும், வெல்லம்பிட்டி காவற்துறை காவற்துறை அதிகார பிரதேசத்தில் சாலமுல்ல கிராம சேவகர் பிரிவு மற்றும் லக்சந்த செவன வீடமைப்பு தொகுதி என்பன தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதேநேரம் மட்டக்குளி காவற்துறை அதிகார பிரதேசத்தில் ரந்திய உயன வீடமைப்பு தொகுதியும், பேர்கசன் வீதி தெற்கு பகுதியும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரயில்வே சேவை பணிப்புறக்கணிப்பில்

பாராளுமன்றம் மீண்டும் பொதுமக்களுக்கு திறக்கப்படும்

ஆண்டின் முதலாவது சந்திரகிரகணம்