வகைப்படுத்தப்படாத

இன்று காலை இடம்பெற்ற பதறவைக்கும் முச்சக்கர வண்டி விபத்து!! ஒருவர் பலி ; 2 சிறுவர்கள் படுகாயம்

(UDHAYAM, COLOMBO) – வவுனியா – ஓமந்தை பகுதியில்இ ன்று காலை இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 2 சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.

முச்சக்கரவண்டியில் பயணம் மேற்கொண்ட வயோதிபர் ஒருவர் உயிரிழந்ததுடன், இரு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பிலிருந்து – யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி காலை 6.30மணியளவில் வவுனியா – ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கும் ஓமந்தை பாடசாலைக்கும் இடையே காணப்படும் பாலத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஓமந்தை போக்குவரத்துப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

තැපැල් වර්ජනය තවදුරටත්

අකිල විරාජ් ජනාධිපති කොමිෂන් සභාව හමුවට

Wahlberg leads dog tale “Arthur the King”