விளையாட்டு

இன்று களமிறங்கும் CSK – MI

(UTV | அபுதாபி) – இந்தியன் பிரிமியர் லீக் தொடரானது இன்று(19) அபுதாபியில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

குறித்த தொடரின் முதலாவது போட்டியில் சென்னை சுப்பர் கிங் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் இடம்பெறவிருந்த ஐ.பி.எல் தொடர் கொவிட்-19 பரவல் காரணமாக பிற்போடப்பட்டிருந்ததன் பின்னர் இந்த தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றப்பட்டிருந்தது.

எவ்வாறெனினும் ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்கவிருந்த இலங்கை அணியின் வீரர் லசித் மாலிங்க, இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஸ் ரெய்னா உள்ளிட்ட பிரபல வீரர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வெளிநாட்டு பயிற்சியாளர்களை நீக்க தீர்மானம்

இலங்கை-ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி ஜூன் 7ஆம் திகதி ஆரம்பம்

விலகும் தப்ராஸ் ஷம்ஸி