வணிகம்

இன்று கடல் உயிரினங்களை வேகமாக அபிவிருத்தி செய்வது பற்றிய பிராந்திய மாநாடு கொழும்பில்

(UTV|COLOMBO) தெற்காசியப் பிராந்தியத்தில் வர்த்தகப் பெறுமதியுடைய கடல் உயிரினங்களை வேகமாக அபிவிருத்தி செய்வது பற்றிய பிராந்திய மாநாடு இன்று(26) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.

இலங்கை கடல்வாழ் உயிரின அபிவிருத்தி அதிகார சபையும் சார்க் விவசாய அமைப்பும் கூட்டாக இதனை ஏற்பாடு செய்துள்ளன.

இந்த நிகழ்வில் தெற்காசிய பிராந்தியத்திற்கான கடலுணவு அபிவிருத்தி வேலைத்திட்டம் பற்றி ஆராயப்படும் என தெரிவிக்கப்படுகின்றன.

இன்று உலகில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக மாறியுள்ளதும், மக்கள் போஷாக்குள்ள உணவைப் பெறும் மூலாதாரமாக பரிணமித்துள்ளதுமான கடலுணவுகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது இம்மாநாட்டின் நோக்கமாகும்.

 

 

 

 

Related posts

முதல் Green Super Supermarket இலங்கையில்

சதொச கிளைகளில் சீனி விலை ரூபா 102

இன்று நள்ளிரவு முதல் பெற்றோலின் விலை உயர்வு