உள்நாடு

இன்று உருவாகவுள்ள நிசர்கா

(UTV | இந்தியா) – அரபிக் கடலில் இன்று(02) உருவாகும் நிசர்கா புயல் காரணமாக மகாராஷ்டிரா, குஜராத், கோவாவில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது.

அரபிக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகலுக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாகி பின்னர் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று உருவாக உள்ள புயலுக்கு நிசர்கா(Nisarga) என பெயரிடப்பட்டுள்ளது.

இன்று பிற்பகலுக்கு பிறகு கிழக்கு-மத்திய அரபிக்கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும். அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்கிழக்கு அரபிக் கடல், லட்சத்தீவு பகுதி மற்றும் கேரள கடற்கரை பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல் கிழக்கு-மத்திய மற்றும் வடகிழக்கு அரபிக் கடல் மற்றும் கர்நாடகா,

Related posts

புதிய அலுவலக ரயில் சேவை இன்று முதல் ஆரம்பம்

பதுளை, ஹாலிஎல பகுதியில் புகையிரதம் தடம்புரள்வு

துருக்கி நாட்டின் புதிய தூதுவர் இராணுவ தளபதியுடன் சந்திப்பு [PHOTOS]