உள்நாடு

இன்று உரிய தீர்வின்றேல் நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுடன் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் உரிய தீர்வு கிடைக்காவிடின் நாடளாவிய ரீதியான தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

பொதிகளைப் பொறுப்பேற்றல் மற்றும் பயணச்சீட்டுக்களை விநியோகித்தல் முதலான செயற்பாடுகளில் இருந்து விலகி தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தற்போது தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இது தவிர, மா, சீமெந்து மற்றும் எரிபொருள் பரிமாற்று நடவடிக்கைகளில் இருந்தும் அவர்கள் விலகியுள்ளனர்.

ரயில்வே சமிஞ்ஞை முறைமையில் நிலவும் குறைபாடுகள் திருத்தப்படல் மற்றும் ரயில் பயண கால அட்டவணையை மீளமைத்தல் உள்ளிட்ட 25 கோரிக்கைகளை முன்னிறுத்தி ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் இந்த தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது.

இந்நிலையில் ஏற்படக்கூடிய பாதிப்பை தவிர்க்கும் நோக்கில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தேவையான எரிபொருட்களை ஏற்றிய இரண்டு ரயில்களை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக சீமெந்து மற்றும் கோதுமை மா பரிமாற்றங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நாளாந்தம் சுமார் 495 மெற்றிக் டன் கோதுமை மா தொடருந்து ஊடாக கொண்டு செல்லப்படுகின்றது.

இந்தநிலையில் இன்றைய கலந்துரையாடலில் தீர்வு கிடைக்காவிடத்து தொழிற்சங்க நடவடிக்கை கடுமையாக தொடரும் என தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

‘பூஸ்டர் தடுப்பூசி பெற்றிருந்தால் மட்டுமே’ முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாக கருதப்படும்

இலங்கைக்கு மருத்துவப் பொருட்கள் அன்பளிப்பு

சுழற்சி முறையில் இன்று மூன்று மணி நேர மின்வெட்டு