உள்நாடு

இன்று இரவு 10 மணி முதல் CEYPETCO / IOC விலைகள் குறைப்பு

(UTV | கொழும்பு) – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO) மற்றும் லங்கா ஐஓசி ஆகியவை எரிபொருள் விலையை இன்று இரவு 10 மணிமுதல் குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.

பெற்றோல் மற்றும் டீசல் விலையை 20 ரூபாயாலும் 95 ஒக்டேன் பெற்றோல் மற்றும் சுப்பர் டீசலின் விலை 10 ரூபாயாலும் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபெட்கோ புதிய விலைகள்

பெற்றோல் 92 ஒக்டேன் – ரூ. 450/-

பெற்றோல் 95 ஒக்டேன் – ரூ. 540/-

டீசல் – ரூ. 440/-

சுப்பர் டீசல் – ரூ. 510/-

புதிய எரிபொருள் பாஸ் முறையின்படி ஜூலை 21 முதல் எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என்று கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ஐஓசியும் விலையை குறைத்தது

லங்கா ஐஓசி நிறுவனமும் இன்று இரவு 10 மணி முதல் எரிபொருள் விலைகளை குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

புதிய விலைகள்

பெற்றோல் ஒக்டேன் 92 – ரூ 450

பெற்றோல் ஒக்டேன் 95 – ரூ 540

ஓட்டோ டீசல் – ரூ 440

சுப்பர் டீசல் – ரூ 510

Related posts

இன்றே UTV NEWS ALERT இனை செயற்படுத்த..

நேபாளத்திலிருந்து இலங்கை வந்த 93 மாணவர்கள்

கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்