சூடான செய்திகள் 1

இன்று இரவு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை

(UTV|COLOMBO)-நாட்டின் தென்மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் எதிர்வரும் மணித்தியாலங்களில் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்று இரவு நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

சபரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மற்றும் மேல் மாகாணங்கள் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 100 மில்லி மீட்டர் வரையில் மழை பொழிய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

ஜனாதிபதியின் அதிரடி கருத்து…!

இன்று விசேட போக்குவரத்து ஒழுங்குகள்

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 106 ஆக உயர்வு