உள்நாடுகாலநிலை

இன்று இரவு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

இன்றையதினம் (01) நாட்டின் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை, அம்பாந்தோட்டை, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிக மழை பெய்ய வாய்ப்பு காணப்படுகின்றது.

வட மாகாணம் மற்றும் அநுராதபுரம் மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிக மழை பெய்ய வாய்ப்பு காணப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும்.

இடியுடன் கூடிய மழை வேளைகளில் ஏற்படும் தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கடல் பகுதிகளில்
திருகோணமலையிலிருந்து பொத்துவில் மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை வரையான கடற்பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

Related posts

ஊரடங்கு உத்தரவினை மீறிய 29 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

தீபாவளிப் பண்டிகை : சுகாதார அமைச்சின் அறிவித்தல்

அமைச்சர் வாசு அமைச்சுக்கு சொந்தமான வாகனம், இல்லத்தினை கையளித்தார்