உள்நாடு

இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செ.கஜேந்திரன் (பா.உ ) உட்பட 06  பேர்  கைது !

(UTV | யாழ்ப்பாணம்) –  இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செ.கஜேந்திரன் (பா.உ ) உட்பட 06  பேர்  கைது !

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கும் சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி சுகாஷ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த போராட்டத்துக்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து பொலிஸார் தடை ஏற்படுத்தி இருந்தனர். அதனையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதனால் அடக்குமுறையைப் பயன்படுத்த பொலிஸார் தடை ஏற்படுத்தியதுடன்,
சிலரை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையம் முன்பாக இன்று (11) மாலை 3 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகிமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு நிவாரணம்

 இணையம் ஊடாக பணம் மோசடி- 8 பேர் கைது

சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை இன்றுடன் நிறைவு