உள்நாடு

இன்று அமுலுக்கு வரும் வகையில் சிற்றூண்டிகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

(UTV | கொழும்பு) –   இன்று அமுலுக்கு வரும் வகையில் சிற்றூண்டிகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
✔ இன்று (18) முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து சிற்றுண்டிகளின் விலைகளும் 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
✔ சில மூலப்பொருட்களின் விலை குறைவடைந்துள்ளமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். இதேவேளை,
✔ நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், ஒரு இறாத்தல் (450 கிராம்) பாணின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டது. அத்துடன், சந்தையில் கோதுமை மாவின் விலை 28 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஒரு கோடி ரூபா பெறுமதியான கொக்கேன் போதைப்பொருள் மீட்பு

ஜனாதிபதி நிகழ்த்திய கொள்கை பிரகடன உரை

மாணவர்களை அழைத்து வர அவுஸ்திரேலியா நோக்கி விஷேட விமானம்