சூடான செய்திகள் 1

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் 10 பேர் உயிரிழப்பு…

(UTV|COLOMBO) மஹியங்கனை – பதுளை பிரதான வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலை முன்னால் இன்று அதிகாலை  1.35 அளவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 10 பேர் உயிரிழந்தனர்.

தனியார் பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அதன்போது படுகாயமடைந்த, 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர், காவற்துறை அத்தியகச்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களுள் பெண்கள் மூவரும், குழந்தைகள் மூவரும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்தவர்கள் மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளதாக ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

வேனின் சாரதி வேககட்டுப்பாட்டை இழந்தமையே, இந்த விபத்துக்கான காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த இந்த சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன்ற அமர்வில்

ஞானசார தேரரை கைது செய்யுமாறு நீதவான் உத்தரவு

பாராளுமன்றில் இன்று சமர்பிக்கப்பட்ட அறிக்கை…