உள்நாடு

இன்றும் 70 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்

(UTV | கொழும்பு) – நாட்டில் 10 மாவட்டங்களைச் சேர்ந்த 70 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, மட்டக்களப்பு மாவட்டத்தில், கிரான்குளம் கிராமசேவகர் பிரிவு சி பிரிவிலுள்ள நெசவு நிலைய வீதி, வேலாப்பொடி வீதி, கண்ணகி அம்மன் ஆலயவீதியும், கிரான்குளம் கிராமசேவகர் பிரிவு பி பிரிவிலுள்ள லேக்றோட் வீதி, விதானையார் வீதி, அப்புகாமி வீதிகள் முதலான பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில், கிண்ணியா காவல்துறை அதிகார பிரிவில், கிண்ணியா, பெரியகிண்ணியா, குட்டிக்கராச்சி, அல்தர் நகர், பெரியாத்துமனை, மலிந்தூர், ரஹுமானியான் நகர், சின்னகிண்ணியா, மண்வெளி, கட்டையாறு, குறிஞ்சான்கேணி, முனைச்சேனை முதலான கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், குருநாகல் மாவட்டத்தில், கிரிவுள்ள காவல்துறை அதிகாரி பிரிவின் ஹமன்கல்ல, நாரங்கொட வடக்கு, நாரங்கொட தெற்கு, பட்டபொதெல்ல, மல்கமுவ, தொடங்பொத்த மற்றும் நாரங்கமுவ முதலான கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை கம்பஹா மாவட்டத்தின் பியகம காவல்துறை அதிகாரப் பிரிவுக்குட்பட்ட பியகம வடக்கு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இரத்தினப்புரி மாவட்டத்தின் கஹவத்தை காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட நுகவெல மேற்கு, நுகவெல கிழக்கு. உடஹவுபே, எந்தன மற்றும் மடலகம ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இறக்குவாணை காவல்துறை அதிகாரப் பிரிவிற்குட்பட்ட பனாப்பிட்ட தெற்கு, வடக்கு, கெப்பெல மற்றும் மியனவிட மேற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

காலி மாவட்டத்தின் எல்பிட்டிய காவல்துறை அதிகாரப் பிரிவிற்குட்பட்ட படுவத்ஹேன, வல்லம்பகல கிராம சேவர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தின் பதியதலாவ காவல்துறை அதிகாரப் பிரிவிற்குட்பட்ட கேஹேல்வுல்ல கிராம சேவகர் பிரிவின் கடுபஹர கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட றைகம் தோட்டம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட றைகம் தோட்டம் கீழ் பிரிவு, மஹாஇங்கிரிய கிராம சேவகர் பிரிவிற்குட்பட்டறைகம்புர மற்றும் றைகம் ஜனபதய ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அகலவத்தை காவல்துறை பிரிவிற்குட்பட்ட கித்துல்கொட கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

மாத்தளை மாவட்டத்தின் யட்டவத்தை காவல்துறை பிரிவிற்குட்பட்ட வல்பொல தெற்கு கிராம சேவகர் பிரிவின் வெடிகந்த கிராமம் மற்றும் யட்டவத்தை கிராம சேவகர் பிரிவுக்குபட்ட அலவத்தை கிராமம் என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் நுவரெலியா மாவட்டத்தின் நோர்வூட் காவல்துறை அதிகாரப் பிரிவிற்குட்பட்ட வென்ஜர், இன்ஜஸ்றீ, டில்லரி ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

பொகவந்தலாவ காவல்துறை அதிகாரப் பிரிவிற்குட்பட்ட கெர்கசோல்ட், பொகவானை, லொய்னொன், கொட்டியாக்கலை மற்றும் பொகவந்தலாவ ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் ஹட்டன் காவல்துறை அதிகாரப் பிரிவிற்குட்பட்ட என்பீல்ட் கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

அட்டுளுகம சிறுமி கொலை : சந்தேகத்தின் பேரில் 29 வயதுடைய நபர் கைது

எரிபொருள் நெருக்கடி : ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு ஜனாதிபதி தயார்

சாவகச்சேரி நுணாவில் பகுதியில் மண் கடத்தல் : டிப்பர் சாரதி தப்பிப்பு – டிப்பரை துரத்தி வந்த இருவர் கைது!