சூடான செய்திகள் 1

இன்றும் விசேட போக்குவரத்து ஒழுங்குகள்

(UTV|COLOMBO)-சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒத்திகைகளினால், கொழும்பு – காலி முகத்திடலை அண்மித்த பகுதிகளில் இன்றும் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இன்றைய தினம், எதிர்வரும் 31 ஆம் திகதி மற்றும் எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் 3ஆம் திகதி வரை இந்த ஒத்திகைகள் இடம்பெறவுள்ளதாக, போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பிலான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, இன்று காலை 7 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை காலி முகத்திடலின் ஒரு பகுதி மூடப்படவுள்ளது.

கொள்ளுப்பிட்டி முச்சந்தி முதல் பழைய பாராளுமன்ற சுற்றுவட்டம் வரையான வீதியின் ஒரு பகுதி, லோட்டஸ் வீதியின் செரமிக் சந்தி ஆகியன குறித்த காலப்பகுதியில் மூடப்படவுள்ளது.

இந்த காலப்பகுதியில், காலி வீதியூடாக புறக்கோட்டை நோக்கி செல்லும் வாகனங்கள், லிபர்ட்டி சுற்றுவட்டம், பித்தளை வீதி, சேர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, அக்பார் வீதி, மலே வீதி, சிற்றம்பலம் கார்டனர் வீதியூடாக கொழும்பு புறக்கோட்டையை சென்றடைய முடியும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அத்துடன், கொழும்பு , புறக்கோட்டையிலிருந்து காலி வீதிக்கு செல்லும் வாகனங்கள் மேற்குறிப்பிட்ட சிற்றம்பலம் கார்டனர் வீதி,ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை ஊடாக காலி வீதியை சென்றடைய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

முன்னாள் அமைச்சர் எச்.ஆர். மித்ரபால காலமானார்

எழுபது கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு

தற்கொலைதாரிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய ஒருவர் கைது