(UTV | கொழும்பு) – இன்று (15) மின்வெட்டுக்கான இலங்கை மின்சார சபையின் கோரிக்கை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, P, Q, R, S, T, U, V, W வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேர மின்வெட்டும் மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணி நேர மின் வெட்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
அதேபோல், A, B, C, D, E, F, G, H வலயங்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இரண்டரை மணி நேர மின் வெட்டும் மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ஒரு மணி நேரம் 15 நிமிடங்களும் மின் வெட்டு அமலுப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.