உள்நாடு

இன்றும் மின்வெட்டு அமுலுக்கு

(UTV | கொழும்பு) – நாட்டில் இன்றைய தினமும் சுழற்சி முறையில் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது.

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, A முதல் L வரையான வலயங்களில் இன்று முற்பகல் 9 மணிமுதல் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில் 3 மணி 15 நிமிடம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

அதற்கமைய, முற்பகல் 9 மணி முதல் மாலை 6.15 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இரண்டு மணி நேரமும், மாலை 6.15 முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதிக்குள், ஒரு மணிநேரமும் 15 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், P முதல் W வரையான வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், இன்று மாலை 3 மணி முதல் இரவு 11 மணிவரையிலான காலப்பகுதியில் 2 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

Related posts

எரிபொருளின் விலைகள் அதிகரிக்கப்படாது

1700 ரூபா சம்பளம்: நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு

உறுமய தேசிய செயற்பாட்டு செயலகம் ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் திறந்து வைப்பு!