உள்நாடு

இன்றும் மின்வெட்டு

(UTV | கொழும்பு) – இன்றைய தினமும் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின் தடையை அமுலாக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மின் துண்டிப்பு தொடர்பில், இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L முதலான வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதிக்குள் இரண்டரை மணித்தியாலமும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடமும் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது.

அத்துடன், P, Q, R, S, T, U, V, W முதலான வலயங்களில், காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதிக்குள் 2 மணி நேரமும், மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதிக்குள் ஒரு மணி நேரமும் மின்தடை அமுலாக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Related posts

ஜனாதிபதி ஊடாக மக்களுக்கு விரைவில் நிவாரணம்

ஜனவரி முதல் வாகனங்களை இறக்குமதி!

இலங்கை மற்றும் பூட்டானுக்கான இஸ்ரேலிய தூதுவர் ஜனாதிபதியை சந்தித்தார்.