உள்நாடு

இன்றும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை

(UTV | கொழும்பு) – தென், மேல் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில், குறிப்பாக ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பாகங்களில் காற்றின் வேகம் 50-60 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்க்குமாறு திணைக்களம் எச்சரித்துள்ளது.

கடற் பிராந்தியங்களில் காற்றின் வேகம் 60-70 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உலகின் சிறந்த நிலத்தடி திட்டங்களில் உமா ஓயா

கொவிட் – 19 தொடர்பில் மக்கள் முறைப்பாடுகளுக்கு புதிய இலக்கம் அறிமுகம்

ஜனாதிபதி பாரளுமன்ருக்கு