உள்நாடு

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

(UTV | கொழும்பு) –   நாட்டின் பல பகுதிகளில் இன்று (15) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் என திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக் கூடும் எனவும் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய மின்னல் விபத்துக்கள் மற்றும் தற்காலிக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் விபத்துக்களை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு தெரிவிக்கின்றது.

Related posts

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் முக்கிய அறிவிப்பு

வில்பத்து பகுதியில் உயிரிழந்த நிலையில் டொல்பின்கள் – விசாரணை ஆரம்பம்

editor

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் பூரண குணம்