உள்நாடு

இன்றும் மழையுடனான காலநிலை

(UTV | கொழும்பு) – மேல், சப்ரகமுவ, வட-மேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை அவ்வப்போது பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டின் வேறு பாகங்களிலும் குறிப்பாக மாலை அல்லது இரவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர, மன்னார், யாழ்ப்பாணம் மாவட்டங்களில் காலையிலும் மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வட மேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் 75 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

பாடசாலை போக்குவரத்து வாகனங்களது கட்டணங்களும் உயர்வு

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவார்

உலகம் முழுவதும் Microsoft Teams சேவைகள் செயலிழப்பு