உள்நாடு

இன்றும் மழையுடனான காலநிலை

(UTV | கொழும்பு) – நாட்டில் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று(17) மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீற்றர்வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை..!

இலங்கை விமான படைக்கு புதிய தளபதி நியமனம்

தளர்த்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீண்டும் இறுக்க வேண்டாம்