சூடான செய்திகள் 1

இன்றும் மழையுடனான காலநிலை தொடரும்

(UTV|COLOMBO)-வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள அலை வடிவிலான தளம்பல் நிலை காரணமாக நாட்டின் பல பாகங்களில் இன்றும் மழையுடனான காலநிலை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி , மேல்,கிழக்கு ,ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி , மாத்தறை , மாத்தளை ,பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, தலவாக்கலை கிரேட்வெஸ்டன் பகுதியில் லூசா, ஸ்கல்பா மற்றும் மலைத்தோட்டங்களில் நேற்றிரவு மழையுடன் கடுங் காற்று வீசியதால் 50 வீடுகள் வரையில் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக சுமார் 150 பேர் இடம்பெயர்ந்த நிலையில் தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஹட்டன் பகுதிகளிலும் காற்று காரணமாக பல வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

உலக சுகாதார அமைப்பு இலங்கைக்குப் பாராட்டு

‘மித்ர சக்தி’ கூட்டுப் பயிற்சி இன்று ஆரம்பம்

கல்வி அமைச்சர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்