உள்நாடு

“இன்றும் போராடவுள்ள ஆசிரியர், அதிபர்கள்”


நாடளாவிய ரீதியில் சுகவீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் இன்றும் ஈடுபடவுள்ளதாக அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, சுகவீன விடுமுறையை பதிவு செய்த அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் நேற்று(26) பகல் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பித்த எதிர்ப்பு நடவடிக்கையை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.

இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. தமது போராட்டம் மீதான நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

Related posts

சமூகப் பாதுகாப்பு நிதியத்துடன் மனிதாபிமான உணர்வுடன் இணையுங்கள்

கொரோனா; புதிய தொலைப்பேசி இலக்கம்

அரச வாகனங்களை செப்பனிட்டு பயன்படுத்த அனுமதி