உள்நாடு

இன்றும், நாளையும் விசேட சுற்றிவளைப்புகள்

(UTV | கொழும்பு) –  அதிவேக நெடுஞ்சாலையில் இன்றும், நாளையும் விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

வார இறுதி நாட்களில் வாகன சாரதிகள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் குறிப்பாக பண்டிகை விடுமுறைகளுக்காக தமது சொந்த இடங்களுக்கு சென்று மீண்டும் கொழும்பு நோக்கி பயணிப்பவர்கள் வீதி சட்டங்களை உரிய முறையில் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அவ்வாறு வீதி சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 120 ஆக உயர்வு

பாட்டளிக்கு எதிரான விபத்து : மேலதிக விசாரணைகள் ஒத்திவைப்பு

நாட்டில் எகிறும் கொரோனா பலிகள்