உள்நாடு

இன்றும் நான்கு பேர் கொரோனாவுக்கு பலி

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 4 கொவிட்-19 மரணங்கள் பதிவானமையை அடுத்து மரணித்தவர்களின் எண்ணிக்கை 638 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஆண் ஒருவர் மினுவங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 21 ஆம் திகதி மரணித்தார்.

மோசமடைந்த கொவிட் நியூமோனியா நிலை காரணமாக அவர் மரணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், பன்னிப்பிட்டியைச் சேர்ந்த 40 வயதான ஆண் ஒருவர் கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில் கடந்த 23 ஆம் திகதி மரணித்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் அவருக்கு தொற்றுறுதியானமையை அடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் அவர் மரணித்தார்.

நாட்பட்ட ஈரல் நோய் மற்றும் குருதி விஷமானமை காரணமாக அவர் மரணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வத்தளையைச் சேர்ந்த18 வயதான யுவதி ஒருவர் ஹேமாஸ் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 21 ஆம் திகதி மரணித்தார்.

கொவிட் நியூமோனியா நிலைமை மற்றும் இருதய நோய் காரணமாக அவர் மரணித்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    

Related posts

கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் விசேட பாதுகாப்பு

editor

இலங்கைக்கு வருபவர்களுக்கான புதிய வழிகாட்டல்கள்

UTV நடாத்தும் குறுந்திரைப்படப் போட்டி – 2024 || UTV Short Film Competition 2024