உள்நாடு

இன்றும் சுழற்சி முறையிலான மின்வெட்டு

(UTV | கொழும்பு) –  நாடளாவிய ரீதியாக இன்றைய தினம் மின்வெட்டினை அமுலாக்குவது குறித்து இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, A முதல் L வரையிலான வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையிலான காலப்பகுதியினுள் 3 மணிநேரமும் 20 நிமிடமும், மாலை 06 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியினுள் ஒரு மணி நேரமும் 40 நிமிடமும் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், P முதல் W வரையான வலயங்களில் காலை 8.30 முதல் மாலை 5.30 வரையான காலப்பகுதியினுள் 4 மணிநேரமும் 30 நிமிடங்களும், மாலை 5.30 முதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியில் ஒரு மணிநேரமும் 50 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

இன்றைய தினத்திற்கான மின்வெட்டு

MPகளுக்காக பிரதேச செயலகங்களுக்கு நிதி ஒதுக்கீடு: வடக்கு MPக்களுக்கு விஷேட நிதி

ஜனவரி முதல் வாகனங்களை இறக்குமதி!