உள்நாடு

இன்றும் சுழற்சி முறையிலான மின்வெட்டு

(UTV | கொழும்பு) –  நாடளாவிய ரீதியில் இன்றைய தினமும் சுழற்சி முறையில் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, A முதல் L வரையான வலயங்களில், காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில், 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளது.

அத்துடன், P முதல் W வரையான வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியினுள் இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்சாரத்தை துண்டிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

இரண்டு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியை நாளை

மின் கட்டண நிலுவை இருந்தால் அதை செலுத்த தயார் – நாமல் கட்சியின் செயலாளருக்கு அறிவிப்பு