உள்நாடு

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

(UTV | கொழும்பு) – இன்றைய தினமும் நாடளாவிய ரீதியில் பல இடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, E மற்றும் F ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் 5 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், மாலை 6 மணி முதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணித்தியாலங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்களுக்கும், மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலத்துக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

 

Related posts

சஜித்- சந்திரிக்கா சந்திப்பு

MT New Diamond – நட்டஈடாக 440 மில்லியன் ரூபா [UPDATE]

கொவிட் 19 நிதியத்திற்கு 3 மில்லியன் ரூபாய் நன்கொடை