உள்நாடு

இன்றும் சமையல் எரிவாயு விநியோகம் இல்லை – லிட்ரோ

(UTV | கொழும்பு) – இன்றைய தினமும் வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக வரிசைகளில் காத்திருப்பதை தவிர்க்குமாறு அந்த நிறுவனம் பொது மக்களைக் கோரியுள்ளது.

நாளைய தினம் நாட்டை வந்தடையவுள்ள கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்கும் வரையில், எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க இயலாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் நாளைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது.

7,500 மெட்ரிக் டன் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக, 6.5 மில்லியன் டொலர் கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்றும் நாளையும் தகவல் சாளரம் நிறுவப்படும் – குஷானி ரோஹணதீர

editor

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்

editor

வினாத்தாள் வெளியான சம்பவம் – மற்றொருவர் கைது!