உள்நாடுகாலநிலை

இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும்

கிழக்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

ஏனைய பகுதிகளில், மாலை அல்லது இரவில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைக்க பொதுமக்கள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது

Related posts

கண்டியில் இரு மரங்கள் முறிந்து விழுந்ததில் வாகனங்களுக்கு பலத்த சேதம், இருவர் காயம்!

தொழில்நுட்பக் கோளாறு – பயணித்துக் கொண்டிருந்த ரயில் இயந்திரத்தில் தீ விபத்து

editor

லண்டன் நகரில் இருந்து வந்தவர்கள் அனைவரும் சீனர்கள் [UPDATE]