உள்நாடு

இன்றும் அரசியலமைப்பின் 21வது திருத்தம் அமைச்சரவைக்கு

(UTV | கொழும்பு) –   அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பான சட்டமூலம் மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்ட வரைபு தொடர்பான பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் அனைத்து தரப்பினருக்கும் இடையில் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து உத்தேச திருத்தம் கடந்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட நிலையில் மேலும் திருத்தங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவை தீர்மானம் மேற்கொண்டது.

இந்நிலையில், வாராந்த அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.

இதன்படி, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ 21வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைபை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள் இன்று முதல் வழங்கப்படும்

வெள்ளை வேன் ஊடக சந்திப்பு – ராஜித, ரூமிக்கு அழைப்பாணை

மத்திய கிழக்கு, சீன மற்றும் இந்திய இராஜதந்திரிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்