உள்நாடுசூடான செய்திகள் 1

இன்றுமுதல் உயர்த்தப்பட்ட எரிபொருட்களின் விலை உயர்வு! (விபரம்)

(UTV | கொழும்பு) –

இன்று அதிகாலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.

அதன்படி,  346 ரூபாயாக காணப்பட்ட ஒக்டேன்  92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றில் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 366 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 426 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விரை 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 464 ரூபாவாகும்.

இதேவேளை, 329 ரூபாயக காணப்பட்ட ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 29 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 358 ரூபாவாகும்.

434 ரூபாயக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன்  லீற்றர் ஒன்றின் விலை 41 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 475 ரூபாவாகும்.

இதேவேளை,  மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 11 ரூபாவினால் ​குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 236 ரூபாவாகும்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 132 பேர் கைது

உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம் – சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

editor

நிறுவன பிரதானிகள் கோரினால் பொதுப்போக்குவரத்து சேவை வழங்க தயார்