விளையாட்டு

இன்சமாமின் உடல் நிலை வழமைக்கு

(UTV |  லாகூர்) – பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும் தேர்வுக்குழுத் தலைவருமான இன்சமாம் உல் ஹக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லாகூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்சமாம் உல் ஹக்கிற்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது. இந்த சிகிச்சைக்குப் பின் அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்சமாம் உல் ஹக் கடந்த 3 நாட்களாக லேசான நெஞ்சு வலி இருப்பதாகத் தெரிவித்து வந்துள்ளார். ஆனால், நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டார். முதல் கட்டமாக மருத்துவர்கள் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்து இரத்தக்குழாயில் அடைப்பை நீக்கியுள்ளனர். இன்சமாம் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

பாகிஸ்தான் அணி 1992-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றபோது அந்த அணியில் இடம் பெற்றிருந்தவர் இன்சமாம் உல் ஹக். வலது கை துடுப்பாட்ட வீரரான இன்சமாம் உல் ஹக் பாகிஸ்தான் அணியில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிகமான ஓட்டங்களை குவித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தென்னாபிரிக்க அணியுடனான இருபதுக்கு – 20 இலங்கை குழாம் அறிவிப்பு

இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக சஹீர் கான் நியமனம்!

முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற ஸ்வியாடெக்