உள்நாடு

இனி பேருந்துகளுக்கு நடத்துனர் தேவை ஏற்படாது

(UTV | கொழும்பு) – இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், பேருந்து நடத்துனர்களுக்கு பதிலாக டிக்கெட் வழங்கும் முறையை அறிமுகப்படுத்த உள்ளது.

தற்போது நடத்துனர்களை நியமிக்க பேருந்து உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

எனவே, நடத்துனர்களின் உதவி இல்லாமல் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி,எதிர்காலத்தில் பேரூந்துகளின் முன் வாசலுக்கு அருகில் தானியங்கி டிக்கெட் அமைப்பு நிறுவப்படும்.

தானியங்கி மின்னணு டிக்கெட் இயந்திரம் சரி செய்யப்பட்டதும், பயணிகள் தங்களுக்குரிய டிக்கெட்டுகளை தாங்களே பெறலாம் எனவும் தெரிவித்திருந்தார்.

Related posts

திவுலப்பிட்டியவில் 1,500 மாணவர்கள் தனிமைப்படுத்தலுக்கு

பால்மாவுக்கான புதிய விலை நாளை அறிவிக்கப்படும்

இதுவரை 885 கடற்படையினர் குணமடைந்துள்ளனர்