உள்நாடுசூடான செய்திகள் 1

இனவாதிகளால் கொல்லப்பட்ட பெளசுல் அமீன் குடும்பத்திற்கு வீடு!

(UTV | கொழும்பு) –

கடந்த 2019.05.13 ஆம் திகதி திங்கட்கிழமை ஏற்பட்ட திகன கலவரத்தின் போது மரணித்த சகோதரர் பெளசுல் அமீர் அவர்களின் குழந்தைகளுக்கான உதவித்திட்டத்தின் ஒரு கட்டமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைப் பிரிவு மற்றும் கொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்மேளனத்தினால் 2021-02-17 ஆம் திகதி வீடு வாங்கிக் கொடுக்கப்பட்டது.

அதன் பதிவு செய்யப்பட்ட வீட்டுக்கான உத்தியோகபூர்வ உறுதி 2022-11-06 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொட்டாரமுல்லை பிரதேசக்கிளை உறுப்பினர்கள், கொட்டாரமுல்லை ஜுமுஆ மஸ்ஜித் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பெளசுல் அமீர் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில், சகோதரர் பெளசுல் அமீர் அவர்களின் குழந்தைகளான பௌசுல் அமீர் அஜ்மிர், பௌசுல் அமீர் அஜ்மல், பௌசுல் அமீர் ஆஇஷா, பௌசுல் அமீர் அப்துர்ரஹ்மான் ஆகியோர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது.


BE INFORMED WHEREVER YOU ARE

எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இரண்டாவது உலக யுத்த கால கப்பல் இலங்கை கடற்படையினரால் மீட்டெடுப்பு

நாட்டில் மொத்தமாக 50 பேர் குணமடைந்துள்ளனர்

பல்கலைக்கழகங்களை அடுத்த வாரம் ஆரம்பிக்க நடவடிக்கை – அமைச்சர் ரவூப் ஹக்கீம்