அரசியல்

இனவாதம், மதவாதங்களை கைவிட்டு நாட்டுக்காக ஒன்றுபட்டு உழைப்போம் – சஜித்

நாடு வீழ்ந்துள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள வேண்டும். அவ்வாறு மீள வேண்டுமானால் முழு நாடும் ஒன்றுபட்டால்தான் இது முடியும். சிங்களம், தமிழ், முஸ்லிம், பர்கர் என பல்வேறு மதங்களை பின்பற்றும் மக்கள் சாதி, இனம், மதம் என பிரிந்து செயல்பட்டால் நாட்டைக் கட்டியெழுப்புவது கடினமாகும்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 298 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன வன்னி, மன்னார் அல் மினா மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூலை 08 ஆம் திகதி இடம்பெற்றது.

இதன்போது, பாடசாலை நூலகத்திற்குத் தேவையான ஆங்கில நூல்களைக் கொள்வனவு செய்து கொள்வதற்கு பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நாடு அனைவரின் நாடாகும். இது ஒரு இனத்திற்கோ மதத்திற்கோ சொந்தமான நாடல்ல. சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களுக்கும் உரித்தான இந்த நாட்டின் ஒற்றுமையே நாட்டின் பலமாக அமைய வேண்டும்.

சகோதரத்துவம், நல்லிணக்கம், நட்புறவு என்பன எமது பயணமாக அமைந்து காணப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இனவாதமும் மதவாதமும் ஒரு புற்றுநோயாகும்.

அந்தந்த மதங்கள் கலாச்சாரங்கள் மற்றும் பாரம்பரியங்களுக்கு உரிய மரியாதை அளித்து அனைவரும் ஒருமனதாக ஒற்றுமையாக இருந்து உரிய மரியாதை வழங்க வேண்டும். எமது நாட்டில் இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் இடம் வழங்கக்கூடாது.

இனவாதமும் மதவாதமும் ஒரு புற்றுநோயாகும். இனவாதம், மதவாதம், பிரிவினைவாதம், கோத்திரவாதம் என்பவற்றால் நாடு பிளவுபட்டு பிரிவினைகள் தோற்றம் பெறும்.

அது நடக்காமல் இருக்க வேண்டும். ஒற்றுமையுடன் நாமனைவரும் இணைந்து வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கல்வியை உயர்நிலைக்கு கொண்டு வந்து கல்வியைப் பலப்படுத்தியே இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்.

எனவே கல்வியில் கூடிய கவனம் செலுத்தி நாட்டை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Related posts

கோட்டாபயவும் ரணிலும் எதேச்சதிகாரமாக முன்னெடுத்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்து செய்வோம் – சஜித்

editor

பதில் ஊடக அமைச்சராக சாந்த பண்டார!

தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற காலம் சரி – சஜித்

editor