அரசியல்உள்நாடு

இனவாதத்தை தூண்ட முயல்கின்றனர் எந்த காரணத்திற்காகவும் அனுமதிக்க மாட்டோம் – அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ

தேர்தல் காலத்தில் இனவாதத்தையும் மததீவிரவாதத்தையும் எங்களிற்கு எதிராக பயன்படுத்தியவர்கள் தற்போது இனவாதத்தை தூண்ட முயல்கின்றனர் என தெரிவித்துள்ள தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ எந்த காரணத்திற்காகவும் இனவாதம் தலைதூக்குவதற்கு அனுமதிக்கமாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

தேர்தல் காலத்தில் இனவாதத்தையும் மததீவிரவாதத்தையும் எங்களிற்கு எதிராக எப்படி தேர்தல் வாக்களிப்பிற்கு முன்னர் பயன்படுத்தினார்கள் என உங்கள் மனச்சாட்சியை கேட்டுப்பாருங்கள்.

தேர்தல் காலத்தில் எங்களிற்கு எதிராக வேண்டுமென்றே பொய்களை பரப்பினார்கள்.

எங்களை தெரிவு செய்தால் மக்கள் தங்கள் மத நம்பிக்கைகளை பின்பற்ற முடியாத நிலை ஏற்படும் எங்களிற்கு எதிராக இந்த கதைகளை பரப்பியவர்கள் தற்போது இனவாதத்தை தூண்ட முயல்கின்றனர்.

Related posts

ஷானி அபேசகரவின் பிணை மனு நிராகரிப்பு

சுரக்‌ஷ காப்புறுதி திட்டம் தொடர்ந்து முன்னெடுப்பு

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்