சூடான செய்திகள் 1

இனந்தெரியாத துப்பாக்கிதாரியால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

(UTVNEWS | COLOMBO)- கொத்தட்டுவ – முல்லவத்தை பகுதியில் இன்று(02) இனந்தெரியாத துப்பாக்கிதாரியால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர் கொத்தட்டுவ – ஐ.டி.டி.எச் வீதி பிரதேசத்தை சேர்ந்த 40 வயதான துஷாரா வைஷாந்த தயாபிரிய என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு

” இலங்கைக்கான ஜி.எஸ்.பி வரிச் சலுகை இம்மாதம் 22ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் – அமைச்சர் றிசாத் பதியுத்தீன்

வௌியேற தயார் – மஹிந்தவுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் – சாகர காரியவசம்

editor