சூடான செய்திகள் 1

இந்த வருடத்தில் 12084 டெங்கு நோயாளர்கள் பதிவு…

(UTV|COLOMBO) இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 12 ஆயிரத்து 84 டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் இதில் அதிக நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.

ஜனவரி மாதத்தில் 5 ஆயிரத்து 576 டெங்கு நோயாளர்களும், பெப்ரவரி மாதத்தில் 3 ஆயிரத்து 670 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதனுடன் மார்ச் மாதம் இதுவரை 2 ஆயிரத்து 838 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு மீண்டும் விளக்கமறியல்

2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மார்ச் 05ம் திகதி

உயர்தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கோரி மனு தாக்கல்!!