உள்நாடு

‘இந்த நிலைமையில் தொடர்ந்தும் அரசினை முன்னெடுத்து செல்ல முடியாது’

(UTV | கொழும்பு) –   இலங்கையில் நாளுக்கு நாள் மோசமான காலம் வருவதாகவும், இவ்வாறான அரசாங்கத்தை நடத்துவது கடினம் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

“உணவு நெருக்கடி உள்ளது. உணவு ஏற்றுமதியை நாடுகள் ஏற்கனவே நிறுத்திவிட்டன. உக்ரைன் நெருக்கடியை நாங்கள் எங்கள் நெருக்கடியுடன் சேர்க்கவில்லை.

சர்வதேச நாணய நிதியத்திற்கு நாங்கள் சரியான நேரத்தில் செல்லவில்லை. அந்நியச் செலாவணியைப் பெறும் வழியை இழந்துவிட்டோம். எரிபொருளுக்காக நீண்ட வரிசைகள் உள்ளன.

ஒவ்வொரு காலையிலும் நாங்கள் கப்பல்களுக்கு செலுத்துவதற்கு $ 20, $ 30, $ 40 ஆகியவற்றை எவ்வாறு கண்டுபிடிப்பது என்று சிந்திக்கிறோம். ஒன்றுக்கு பணம் கொடுக்க முடியாவிட்டால், அன்றே தட்டுப்பாடு ஏற்படும்.

இப்படி ஒரு அரசை நடத்த முடியாது. நமது கெட்ட காலம் இன்னும் வரவில்லை. சாப்பாடு இருக்காது.

எங்கள் உணவு விநியோகம் செப்டம்பர் மற்றும் அக்டோபர் வரை மட்டுமே. அடுத்த மகா பருவத்திற்கு உரம் வழங்க முயற்சித்து வருகிறோம். அப்படி நடந்தால், வரும் பெப்ரவரியில் சாதகமான சூழ்நிலை உருவாகும்.

பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது அதிகமான வேலைகள் இழக்கப்படுகின்றன. சிறு, குறு தொழில்கள் நசியும். நாங்கள் அங்கு செல்கிறோம். மக்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவும் இருக்காது..” எனத் தெரிவித்திருந்தார்.

Related posts

“GotaGo போராட்டம் முடிவுக்கு”

மறு அறிவித்தல் வரும் வரை வெயாங்கொடவிற்கு ஊரடங்கு

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு SLPP தீர்மானம்.