அரசியல்உள்நாடு

இந்த தேர்தலில் எவரும் இன, மத பற்றி பேசவில்லை – அதுவே ஒரு வெற்றியாகும் – அமைச்சர் அலி சப்ரி

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் என அனைத்து பகுதிகளிலுமுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனேயே இருக்கின்றனர்.

நாட்டைக் கட்டியெழுப்பிய தலைவருக்கு அனைவரும் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும். இந்த தேர்தலில் எவரும் இன, மத பற்றி பேசவில்லை. அதுவே ஒரு வெற்றியாகும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

பம்பலப்பிட்டியில் இன்று புதன்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கை மக்களுக்கு பொதுவாகக் காணப்படும் சவால்களைப் பற்றியே பேசுகின்றனர். அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மக்களின் சம்பளமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தேவையேற்படின் அந்த மக்களை பாதுகாப்பதற்கான சட்டங்களையும் அறிமுகப்படுத்துவோம். ஏனையயோரைப் போன்று அவர்களும் கன்னியத்துடன் வாழ வேண்டும்.

அனைத்து இன மக்களது தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம். இன பேதமின்றி மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே.

சில விடயங்களுக்கு எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டாலும், அவர் துணிச்சலுடன் தீர்மானங்களை எடுக்கின்றார். இதற்கு முன்பிருந்த தலைவர்கள் ஏனையோருக்கு பயந்து சிறுபான்மை மக்களுக்கான தீர்மானங்களை எடுப்பதற்கு பின்வாங்குவார்கள்.

மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் என்றால் அது நன்மைக்கான மாற்றமாகவே இருக்க வேண்டும். மாறாக வீழ்ச்சிக்கான மாற்றமாக இருக்கக் கூடாது.

மக்களை பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையிலேயே இன்று பங்களாதேஷில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் தற்போதுள்ள நிலைமையை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்கு ரணில் விக்கிரமசிங்கவிடம் மீண்டும் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என்றார்.

-எம்.மனோசித்ரா

Related posts

மே மாதம் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்

ஊரடங்கு சட்டத்தை மீறிய 101 பேர் கைது

மஹிந்த தேசப்பிரிய தனது வீட்டின் முன் பதாகையை தொங்கவிட்டு ஆர்ப்பாட்டத்தில்..!